துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனால் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக 2 மர்ம நபர்கள் நாடாளுமன்றம் அருகே வாகனம் நிறுத்துமிடத்திற்கு நுழைந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென தனது உடலில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்.
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸாருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அவருடன் வந்திருந்த மற்றொரு பயங்கரவாதியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டின் இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.