இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு ரீதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கச் செலவு 3,860 மில்லியன் ரூபாவாகும்.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 203 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட செலவு 3,657 மில்லியன் ரூபாவாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2024 இல், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு மிகப் பெரிய தொகையாக 886 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.