Tuesday, July 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'சீதா' யானையை சுட்டவர் கைது

‘சீதா’ யானையை சுட்டவர் கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ரந்தோலி பெரஹெராவின் போது ‘சீதா’ என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 03.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டு யானை என நம்பி யானை தவறுதலாக சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, மஹியங்கனை ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles