ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த அறிவிப்பினை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாளை முதல் குறித்த உத்தரவினை மீறுவோரை கண்டறிய திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.