Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக, களுகங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கலவெள்ளாவ பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு எற்படக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், களுகங்கையின் நீர்மட்டம் புடுபாவுல பகுதியிலும் நில்வளகங்கையின் நீர்மட்டம் தல்கஹாகொட பகுதியிலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles