12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் மாமா என கூறப்படும் 32 வயதுடைய நபரே வனாத்தவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டில் தங்கியிருந்த போது சந்தேக நபர் தன்னை வன்புணர்ந்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இருவக்கவில்ல என சிறுமி பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.