Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உலகம்100 கிலோ கஞ்சாவை உட்கொண்ட செம்மறி ஆடுகள்

100 கிலோ கஞ்சாவை உட்கொண்ட செம்மறி ஆடுகள்

கிரீஸ் நாட்டில் உள்ள அல்மிரோஸ் நகருக்கு அருகில் செம்மறி ஆடுகள் கூட்டமொன்று, பசுமை இல்லத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 100 கிலோகிராம் கஞ்சாவை சாப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவப் பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவை செம்மறி ஆடுகள் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிரீஸ், லிபியா, துருக்கி,பல்கேரியா ஆகிய நாடுகளை தாக்கிய டேனியல் புயலுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குறித்த ஆட்டு மந்தை பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த செம்மறி ஆடுகள் வழிதவறி சென்ற நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டு மந்தையை கண்காணிப்பவர் அவற்றை கண்டுபிடித்த போது, ​​அவை விசித்திரமாக நடந்துகொண்டதைக் கவனித்ததாக அவர் தெரிவித்தார்.

எனினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பின் எஞ்சியிருந்த கஞ்சாவை செம்மறி ஆடுகள் உண்டதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் என கஞ்சா பயிரிடப்பட்ட பசுமை இல்லத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா வளர்ப்பு 2017 முதல் கிரீஸில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles