இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இந்நாட்டில் பதிவாகவில்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற பயப்பட வேண்டாம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.