Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுநாடு திரும்புகிறார் தனுஷ்க

நாடு திரும்புகிறார் தனுஷ்க

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

இருபதுக்கு இருபது உலககிண்ண தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நாட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்க 360 தினங்களின் பின்னர் மீண்டும் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி நாட்டிற்கு வருகை தருவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles