Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் - ஷெஹான் சேமசிங்க

இறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் – ஷெஹான் சேமசிங்க

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்ததன் பின்னர், வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும்.

எதிர்வரும் காலப்பகுதியில் அந்நிய செலாவணியின் கையிருப்பின் அடிப்படையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles