Thursday, August 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளேன் - தனுஷ்க குணதிலக்க

மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளேன் – தனுஷ்க குணதிலக்க

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் குற்றச்சாட்டில் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர், “தீர்ப்பே அனைத்தையும் தெளிவுபடுத்திக் கூறுகிறது” என்றார்.

கடந்த பதினொரு மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனது முகாமையாளர், எனது வழக்கறிஞர்கள், குறிப்பாக முருகன் தங்கராசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு உதவிய அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும், எனது பெற்றோருக்கும் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிலருக்கும் நன்றி கூறுகிறேன். எல்லோரும் என்னை நம்பினார்கள், அது எனக்கு மிகவும் பெறுமதியான விடயம், ”என்று அவர் கூறினார்.

எனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரும்பி நாட்டுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles