Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுபாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க நிரபராதி என தீர்ப்பு

பாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க நிரபராதி என தீர்ப்பு

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகக்க நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது தனுஷ்க குணதிலவுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி, அவர் ஆஸ்திரேலிய பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் சுமத்திய குற்றச்சாட்ட்டில், அவருடன் உடலுறவு கொள்ளும்போது தனுஷ்க ஆணுறையை அகற்றியதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், பல நாட்களாக நீடித்த இந்த வழக்கு விசாரணையின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆணுறையை அகற்ற வாய்ப்பு இருக்கவில்லை என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக நீதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles