ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் ஆடைகளில் தடவப்பட்ட வாந்தி மாதிரியில் சயனைட் இருந்ததாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்ட வைத்தியர் ரல்ஹக், இந்த மரணம் சயனைட் விஷத்தை உட்கொண்டமையால் ஏற்பட்டுள்ளதாக அறிவித்ததாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, உயிரிழந்தவரின் ஆடைகளை பரிசோதித்ததில் அவ்வாறான சயனைட் வகை காணப்படவில்லை என்றார்.
இதனால் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என்ற விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய நிபுணர் குழுவின் கவனத்திற்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.