Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதவறான முடிவெடுத்த 14 வயது சிறுவன்

தவறான முடிவெடுத்த 14 வயது சிறுவன்

படபொல – தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.

சகோதரன் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுவன் வீட்டில் இல்லாததால், மூத்த சகோதரன் தேடிய போது, அவர் அறையில் உள்ள மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மாணவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles