Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்விளையாட்டுடி20 கிரிக்கெட் வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்த நேபாள அணி

டி20 கிரிக்கெட் வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்த நேபாள அணி

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஒட்ட எண்ணிக்கையை குவித்து வரலாறு படைத்தது.

2023 ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்திலேயே நேபாள வீரர்கள் டி:20 கிரிக்கெட் அரங்கில் மூன்று சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்தனர்.

19 வயதான இடது கை நேபாள துடுப்பாட்ட வீரர் குஷால் மல்லா, டேவிட் மில்லர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து 34 பந்துகளில் டி:20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பெற்றார்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் மொத்தமாக 50 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக இறுதிவரை ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களை குவித்தார்.

ஐந்தாவது வீரராக களமிறங்கிய திபேந்திர சிங் ஐரியும் 9 பந்துகளில் அரைசதம் விளாசி, இந்திய அணியின் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையினை முறியடித்தார்.

2007 செப்டெம்பர் 19 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி:20 உலகக் கிண்ண போட்டியின் போது யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் பெற்றிருந்தார்.

அதேநேரம், நேபாள அணி இந்த ஆட்டத்தில் மொத்தமாக 314 ஓட்டங்களை பெற்றது. இது டி:20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

2019 பெப்ரவரி 23 ஆம் திகதி அயர்லாந்துக்கு எதிரான டி:20 போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந் நிலையில் அந்த சாதனையும் நேபாள அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

315 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மங்கோலியா 13.1 ஓவரை மாத்திரம் எதிர்கொண்டு 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனால் நேபாளம் 273 ஓட்டங்களினால் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles