சைபர் பாதுகாப்பு தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 20,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடக பாவனை தொடர்பான முறைப்பாடுகள் என அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக கணக்குகளில் ஹேக்கிங் மற்றும் போலி கணக்குகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.