Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்ஈராக்கில் திருமண விழாவில் தீவிபத்து: 113 பேர் பலி

ஈராக்கில் திருமண விழாவில் தீவிபத்து: 113 பேர் பலி

வடக்கு ஈராக்கில் திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில் மணமகனும், மணமகளும் அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கின் வடக்கு நினிவே மாகாணத்தில் அல்-ஹம்தானியா மாவட்டத்தில் நேற்று (26) இரவு நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பட்டாசு கொளுத்தப்பட்ட பின்னர் தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட போது சுமார் 1000 பேர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles