Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா - பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

இந்தியா – பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இருநாட்டு சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது 277 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக நாடுகளுக்கு இடையில் மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

விலைமனு கோருவதில் ஏற்படும் தேவையற்ற கால தாமதத்தை குறைக்கும் வகையில் இந்த புதிய முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles