சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், 20,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அதில் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கஹவத்த பொலிஸார், குறித்த காலப்பகுதியில் பிரதியமைச்சராக இருந்த பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்தநிலையில், அவரை கைது செய்ய வேண்டாமென கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததாக சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.