மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிக்கு சொந்தமான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து உயிரிழந்த மூன்று இலங்கையர்களின் சடலங்கள் அண்மையில் கோலாலம்பூர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மூவரில் ஒருவர் வீட்டின் உரிமையாளரான தம்பதியரின் மகன் எனவும் மற்றைய இருவரும் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இருவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.