Tuesday, July 8, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு துறைமுக நகரத்தை நிதி வலயமாக மாற்ற புதிய சட்டம்

கொழும்பு துறைமுக நகரத்தை நிதி வலயமாக மாற்ற புதிய சட்டம்

கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய சட்டம் துறைமுக நகரத்தை ‘கொழும்பு நிதி வலயமாக’ மாற்றும் என்பதுடன், அதற்கு கடல்சார் நடவடிக்கைகளுக்கான அதிகார வரம்பை வழங்கும்.

இது தொடர்பான புதிய சட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles