Friday, July 11, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் 16 வயது சிறுமி படுகொலை

இந்தியாவில் 16 வயது சிறுமி படுகொலை

இந்தியாவின் சித்தூர் மாவட்டம் பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற 16 வயது சிறுமி தனது கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பவ்யாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர், கிராம மக்கள் அவரை தேடி சோதனையில் ஈடுபட்ட போது, அருகிலுள்ள கிணற்றில் பவ்யாவின் சடலம் மிதப்பதைக் கண்டனர்.

இதையடுத்து பொலிஸார் விரைந்து வந்து உடலை மீட்டுள்ளதோடு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரு சமூக ஊடக இடுகையின்படி, பவ்யாவுக்கு ஒரு சிறுவனிடமிருந்து காதல் கோரிக்கை வந்ததாகவும், ஆனால் அவர் அதை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த சிறுவன் விடாப்பிடியாக இருந்தால், கட்டாயத்தின் பேரில் தொடர்பை குறித்த சிறுமி பேணி வந்துள்ளார்.

இந்நிலையில்இ பவ்யாவை அழைத்து சென்ற சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அவளுக்கு மொட்டை அடித்து , 3 -4 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன், அவரை கொன்று கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு சமூக ஊடக இடுகையின் டிரான்ஸ்கிரிப்ட் மற்றும் அதே நேரத்தில் நம்பகத்தன்மையை நிறுவ முடியாது பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles