Saturday, December 20, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்இத்தாலிய மாஃபியா குழு தலைவர் மற்றியோ மெசினா டெனாரோ காலமானார்

இத்தாலிய மாஃபியா குழு தலைவர் மற்றியோ மெசினா டெனாரோ காலமானார்

30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலிய மாஃபியா குழுவின் தலைவராக செயல்பட்ட மற்றியோ மெசினா டெனாரோ தமது 61ஆவது வயதில் காலமானார்.

உலகளாவிய ரீதியாகவும் இத்தாலியிலும் மிகப்பிரபலமான மாஃபியா அமைப்பின் தலைவராக செயல்பட்ட அவர்,கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தேடப்படுபவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்ததுடன், கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இவர் கைது செய்யப்பட்ட போது, புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்தனர்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் பலத்த காவலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles