எதிர்வரும் காலங்களில் ரயில் பருவச்சீட்டை ரத்து செய்வதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்திற்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பருவச்சீட்டினை ரத்து செய்வதன் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு இலாபம் கிடைக்கும் எனவும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
