Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி

மாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி

மாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்குள் மேலும் 4 நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கன்னோருவை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முட்டை உற்பத்தி அதிகரித்து, நாட்டில் முட்டையின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles