Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணத் தகராறு காரணமாக ஒருவர் படுகொலை

பணத் தகராறு காரணமாக ஒருவர் படுகொலை

வீரகெட்டிய – ரன்ன வீதியின் தலுன்ன சந்தியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,கொல்லப்பட்டவர் 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

படகு ஓட்டுநராக பணிபுரிந்த அவர், பணத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles