Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிபா வைரஸ் தொடர்பில் இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் 1999ல் முதல் முறையாக மலேசியாவில் பரவியதுடன், அண்மையில் இந்தியா – கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, நிபா வைரஸ் காரணமாக இதுவரையில் கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இணங்காணப்பட்டவர்களின் 1,233 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில், 352 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாவதற்கான சாத்தியம் உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில் எதிர்காலத்தில் இலங்கையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles