Tuesday, February 10, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி - IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மீளாய்வு விவாதங்கள் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.

இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை பாதுகாப்பது மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சுமார் 2 வாரங்களாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடரின் இறுதிக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles