பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர் கட்டண பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த குறுஞ்செய்தி சேவை செயற்படும் என சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.