Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுபோவில வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

களுபோவில வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

கொழும்பு – களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 8ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் பிரசவித்த குழந்தைகள் இருவருக்கும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக குறைமாத குழந்தை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், கடந்த 19ஆம் திகதி சுவாசக் கோளாறு காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மற்றைய குழந்தையும் நேற்றையதினம் உயிரிழந்ததுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கொஹுவல பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய, ”சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும்” என கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles