Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்கரையில் சிசுவின் சடலம் மீட்பு

கடற்கரையில் சிசுவின் சடலம் மீட்பு

புத்தளம், ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிசுவின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரசவித்த குழந்தை இன்றி வீட்டில் கவலைக்கிடமான நிலையில் இருந்த பெண்ணை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் சிலாபத்தை சேர்ந்த 36 வயதுடையவராவார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குறித்த பெண் குழந்தையொன்றை பெற்றெடுக்க இருந்ததாகவும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்று பின்னர் அவர் தனியாக வீடு திரும்பியதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தேடுதல் வேட்டையின் பின்னர் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதுடன், அவர்கள் யாரும் அவருடன் வாழவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் அவர் 6வது குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை தொடர்பில் குறித்த பெண் எவ்வித வாக்குமூலமும் வழங்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பெற்றெடுத்த குழந்தை காணாமல் போனமை தொடர்பில் சிலாபம் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles