Sunday, March 29, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடத்தப்பட்ட சாரதி தப்பி வந்தார்

கடத்தப்பட்ட சாரதி தப்பி வந்தார்

கம்பளை – ஜயமாலபுர பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணிப்புரியும் சாரதி சந்தேகநபர்களிடம் இருந்து தப்பி, கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

தம்மை வேனில் ஏற்றி கொழும்பு, ஒருகொடவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்,  அந்த இனந்தெரியாத நபர்கள் தன்னிடம் வாள் ஒன்று தொடர்பாக பலமுறை கேட்டதாகவும் குறித்த சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், பொலிஸாரால் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேனில் கடத்திச் சென்ற குழுவில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

நேற்றுக்  காலை மாவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை  வேன்  ஒன்றில் வந்த சிலர் வழிமறித்து அதன் சாரதியை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles