Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலலித் கன்னங்கர டுபாயில் கைது

லலித் கன்னங்கர டுபாயில் கைது

சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்வெல்ல குறுக்கு வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நபரொருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில், திட்டமிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ரவிந்து சங்கத சில்வா எனும் பூரு மூனா கைது செய்யப்பட்டார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணியில் லலித் கன்னங்கர என்ற இந்த நபரே பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் போதைப்பொருள் கடத்தல், கப்பம் கோரி கடத்தலில் ஈடுபடுதல் மற்றும் பல கொலைகளை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அவரை இலங்கைக்கு அழைத்து வர மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles