Monday, November 18, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் - பதில் பாதுகாப்பு அமைச்சர்

எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் – பதில் பாதுகாப்பு அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதல் இலங்கையில் இடம்பெற்ற இறுதியான தாக்குதல் என்று குறிப்பிட முடியாது என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் உள்ளார்கள், எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம்.

ஆகவே, புலனாய்வு பிரிவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles