பெட்டிகலோ தனியார் பல்லைக்கழகம் மீண்டும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு வருட காலமாக பெட்டிகலோ தனியார் பல்கலைக்கழகம் அரசாங்க மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் குறித்த பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.
இதனையடுத்து, கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டது.
சர்சைக்குரிய பெட்டிகலோ தனியார் பல்கலைக்கழகம் 800 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு சவூதி அரேபியாவில் உள்ள வர்த்தகர் ஒருவரினால் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.