நாட்டின் பணவீக்கமானது மேலும் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதான பணவீக்கம் 2.1% ஆக குறைந்துள்ளது.
இது 2023 ஜூலை மாதம் 4.6% ஆக காணப்பட்டது.
அத்துடன், ஆகஸ்ட்டில் உணவு பணவீக்கமானது -5.4% ஆகக் காணப்படுகிறது, இது ஜூலையில் -2.5% ஆக பதிவானது.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து, கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 53.2 சதவீதமாக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.