யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான இந்திய – இலங்கை அதிவேக பயணிகள் படகு சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை தமிழ் நாட்டின் பொது நலன் அமைச்சர் ஈ.வி. வேலு புதன்கிழமை (20) தெரிவித்தார்.
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த படகு சேவையில் 150 பயணிகள் வரை பயணிக்கலாம்.
60 கடல் மை தூரத்தை கடக்கும் இந்த படகு, சுமார் 2 மணிநேரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்யும்.
இந்த படகு சேவை மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுற்றுலா, கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற தொடர்புகள் அதிக