கேரள மாநிலத்தில் 06 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவும் வைரஸ் எனவும் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சல், வாந்தி, சுவாசப் பிரச்சனைகள் மற்றும் மூளை வீக்கம் போன்றவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கேரளாவில் வசிப்பவர்களை முகமூடி அணியுமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.