Tuesday, November 19, 2024
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட தேவையுடையோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு

விசேட தேவையுடையோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு

இந்த ஆண்டில் விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சுமார் 30 சதவீதமான விசேட தேவையுடையோர், சுயதொழில் செய்பவர்கள் அல்லது தொழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

எனினும், இலங்கையில் 3 சதவீதமான விசேட தேவையுடையவர்களே தொழிலில் ஈடுபடுவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்தநிலையில், குறித்த எண்ணிக்கையை 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரியளவில் பங்களிப்பு செய்யும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு வழமையாக சமூக நலன்புரி நன்மைகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுயதொழில் உதவியாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles