Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாரடைப்பால் மரணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் மரணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பினால் உயிரிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளில், மாரடைப்பு மற்றும் நீரிழிவு காரணமாக 50 வயதிற்குட்பட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்தார்.

50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுடன் தொடர்புடைய 200 இறப்புகள் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பினால் ஏற்படுவதாகவும், மாரடைப்பினால் இளைஞர்கள் இறக்கும் நிலை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி, இவர்களில் பெரும்பாலானோர் துரித உணவுகளுக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களில் சிலர் வேலை மற்றும் கல்விக்காக வீட்டை விட்டு வெளியே தங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles