Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணியொன்றினுள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

காணியொன்றினுள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து நேற்று (19) அபாயகரமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியை ஜே.சி.பி வாகனத்தினால் துப்புரவு செய்தபோது பரல் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்போது கிளைமோர், மிதிவெடி மற்றும் மோட்டார் ஷெல் ஆகியன அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், குறித்த பரலினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் ஊடாக வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles