ஜப்பானில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.
ஜப்பானின் உள்நாட்டலுவல்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் முதியவர்கள் என்ற வரையறைக்குள் உள்ளடங்குகின்றனர்.
இது அந்த நாட்டின் சனத்தொகையில் 29.1 சதவீதமாக பதிவாகியுள்ளது.
உலக நாடுகளின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் உயர்ந்த சதவீதமாக கருதப்படுகிறது.
முதியோர் சனத்தொகை அதிகரிப்பினால் அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சிக்கல் ஏற்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக ஆயுட்காலம் உள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். இது முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தும் காரணிகளில் ஒன்றாக கொள்ளப்படுகிறது.