Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு துறைமுக நகர பெயர் மாற்றப்படும் வாய்ப்பு

கொழும்பு துறைமுக நகர பெயர் மாற்றப்படும் வாய்ப்பு

கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்கனவே 17 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் பெயர் கொழும்பு நிதி நகரம் என மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் துறைமுக நகரத் திட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் முதலீட்டாளர்கள் பணிகளைத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles