இவ் வருடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கும் யோசனைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க முன்மொழிந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்தப்படலாம்.
அதன்படி, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் வெளியிடலம், அடுத்த வருட உயர்தரப் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் வழக்கம்போல நடத்தப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன முன்மொழிந்துள்ளார்.
இந் நிலையில் இந்த யோசனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.