மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை மற்றும் எரிசக்தி துறையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பாக 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மின்சாரத்துறையின் சீர்திருத்தங்களின் முன்னேற்றம், புதிய உத்தேச மின்சார சட்டத்தின் கட்டமைப்பு, நிலைமாறு காலக்கெடு, மனித வள முகாமைத்துவம் மற்றும் இடமாற்றத் திட்டங்கள், ஊழியர்களின் நன்மைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அபிவிருத்தி முகவர் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட உதவிகள் குறித்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் சீர்திருத்த செயலகத்தின் தலைவரும் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.