இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.
இதற்கான ஆரம்ப தரவு சேகரிப்பு அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என குடும்ப சுகாதார நிபுணர் வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கத்தின் மானியத் திட்டம் மற்றும் சர்வதேச மையத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கரு, தாய் மற்றும் குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை மருத்துவர்களால் கணிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.