Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெர்சிக்கு 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கிய இலங்கை கிரிக்கெட்

பெர்சிக்கு 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கிய இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரும் ஊக்குவிப்பாளருமான பெர்சி அபேசேகரவின் உடல் நலத்தை பேணுவதற்கு இலங்கை கிரிக்கெட் அவருக்கு 5 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

” இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது, மேலும் அவர் வீரர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் கோபுரமாக இருந்துள்ளார். அவரது நல்வாழ்வைக் கவனிப்பது எங்களின் பொறுப்பு, என்று மொஹான் டி சில்வா கூறினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக பெர்சியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற மொஹான் டி சில்வாவினால் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles