Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

பல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு – போன்றவை இவற்றில் அடங்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles