Saturday, July 26, 2025
27.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுபரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்

பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்

ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனான முகமது சிராஜ், தனக்கு கிடைத்த பரிசு தொகை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சம்பவம் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட சிராஜ், அவருக்கு கிடைத்த பரிசுத் தொகையை கொழும்பு மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

சீரற்ற காலநிலையிலும், இந்தத் தொடரை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு கொழும்பு மைதானத்தின் ஊழியர்களே காரணம்.மைதான ஊழியர்கள் இல்லாமல் இந்தத் தொடர் நடந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் தான் உண்மையான ஆட்டநாயகர்கள். அதனால் அவர்களுக்கே இந்தப் பரிசுத்தொகையை வழங்குகிறேன் என சிராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles