Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநந்தவனக்காளை முட்டி வயோதிபர் பலி

நந்தவனக்காளை முட்டி வயோதிபர் பலி

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles